ADDED : ஏப் 07, 2024 05:22 AM

பண்ருட்டி : பண்ருட்டி அரசு மருத்துவமனையின் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம், காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடந்தது.
கடலூர் மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குனர் கருணாகரன் தலைமை தாங்கினார். பண்ருட்டி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மாலினி, நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சைகள் பற்றி விளக்கி கூறினார்.
டாக்டர் ராஜ்விஜய் எக்ஸ்ரே அறிக்கை வழங்கி, உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். 62 நபர்களுக்கு காசநோய் உள்ளதா என கண்டறிய எக்ஸ்ரே பரிசோதனை எடுக்கப்பட்டது. 2 நபர்களுக்கு காசநோய் பாதிப்பு உறுதி செய்து, உடன் சிகிச்சை துவங்கினர்.
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் நடராஜ், சுகாதார பார்வையாளர் சரஸ்வதி, ஆய்வக நுட்புனர் ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

