/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் கோ ஆப் டெக்சில் சிறப்பு தள்ளுபடி விற்பனை
/
கடலுார் கோ ஆப் டெக்சில் சிறப்பு தள்ளுபடி விற்பனை
ADDED : ஆக 08, 2024 11:45 PM

கடலுார்: கடலுார் மண்டல கோ ஆப் டெக்சில் 10வது தேசிய கைத்தறி தின விழா நடந்தது.
கடலுார் முல்லை விற்பனை நிலையத்தில் நடந்த விழாவிற்கு, மண்டல மேலாளர் சுப்ரமணியன் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றினார். இதில் அவர் பேசுகையில், ஆடி மெகா சிறப்பு தள்ளுபடி விற்பனையில் கோ ஆப் டெக்சில் 2 பொருட்களின் விலையில் 3 பொருட்களை வாங்கிச்செல்லலாம். சில குறிப்பிட்ட ரகங்களுக்கு மட்டும் 40 முதல் 70 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி விற்பனை நடக்கிறது. இந்த சிறப்பு விற்பனை வரும் 16ம் தேதி வரை மட்டுமே நடைபெறும். எனவே, வாடிக்கையாளர்கள் கைத்தறி தொழில் மேலும் வளர, நெசவாளர்களின் வாழ்க்கை தரம் உயர இந்த சிறப்பு தள்ளுபடியை பயன்படுத்தி கோ ஆப் டெக்சில் கைத்தறி ஆடைகளை வாங்கி பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.