தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பள்ளி மாணவர்களுக்காக கோடை சிறப்பு வகுப்புகள்

பள்ளி மாணவர்களுக்காக கோடை சிறப்பு வகுப்புகள்

பள்ளி மாணவர்களுக்காக கோடை சிறப்பு வகுப்புகள்


ADDED : ஏப் 30, 2024 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 30, 2024 05:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: கோடை விடுமுறையை பயனாக மாற்றும் வகையில், விருத்தாசலத்தில் 13வது வார்டு நண்பர்கள் என்ற பெயரில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில், விருத்தாசலம் நகராட்சி 13வது வார்டு நண்பர்கள் குழு என்ற பெயரில், கோடைக்கால சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

வரும் மே மாதம் 2ம் தேதி முதல், 4ம் தேதி வரை சிறப்பு வகுப்புகள் நடக்கிறது. அதில், போக்குவரத்து விதிகள், போதை ஒழிப்பு, வங்கி மற்றும் ரயில் படிவங்கள் நிரப்புதல், தீயணைப்பு தொடர்பான விழிப்புணர்வு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

மாலை 4:00 மணி முதல் முதல் 5:00 வரை பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. இது பெற்றோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us