/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளியில் விளையாட்டு விழா
/
ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : ஆக 25, 2024 11:59 PM

மந்தாரக்குப்பம்: விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
ஜெயப்பிரியாவின் இளம் தலைமுறையினர் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி வந்தனர். சிறப்பு விருந்தினராக ஜெயப்பிரியா கல்விக் குழுமத் தலைவர் ஜெயசங்கர் பங்கேற்று வெண்புறாக்களைப் பறக்கவிட்டு விளையாட்டுப் போட்டிகளைத் துவங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பள்ளி கல்வி குழும இயக்குநர் தினேஷ் எதிர்காலத்தில் மாணவர்கள் விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என ஊக்கப்படுத்தினார். மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை பள்ளியின் முதன்மை நிர்வாக அலுவலர் ராமன் குமாரமங்கலம், முதல்வர் நித்யா, உடற்கல்வி ஆசிரியர் பிரபு, ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.