/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மஞ்சக்கொல்லை பள்ளியில் விளையாட்டு விழா பரிசளிப்பு
/
மஞ்சக்கொல்லை பள்ளியில் விளையாட்டு விழா பரிசளிப்பு
ADDED : மார் 12, 2025 11:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : மஞ்சக்கொல்லை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விளையாட்டு விழாவில்,வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை அரசு மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ரவி தலைமை தாங்கினார்.
உடற்கல்வி ஆசிரியர் ராமசாமி வரவேற்றார். ஓய்வுபெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் உமா மற்றும் சகாய ஜெயராஜ் ஆகியோர் கபடி, வாலிபால், மேஜைப் பந்து, சதுரங்கம், கேரம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
உடற்கல்வி ஆசிரியர் கலைவாணன் நன்றி கூறினார்.