/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் பள்ளி 10ம் வகுப்பில் தொடர் சாதனை
/
ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் பள்ளி 10ம் வகுப்பில் தொடர் சாதனை
ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் பள்ளி 10ம் வகுப்பில் தொடர் சாதனை
ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் பள்ளி 10ம் வகுப்பில் தொடர் சாதனை
ADDED : மே 12, 2024 05:36 AM

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் தொடர்ந்து 14 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வை 165 பேர் எழுதி, அனைவரும் தேர்ச்சி பெற்றனர். மாணவர் ராஜ்குமார் 500 க்கு 495 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவி அஞ்சுஸ்ரீ 493 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், ஆண்டோ பெனிட்டா ஜாய், கிேஷாரி, சாந்தனா, நித்தியஸ்ரீ ஆகிய நான்கு பேர் தலா 492 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றனர். 48 பேர் தனித்தனி பாடப்பிரிவுகளில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 9 பேர் 490க்கு மேலும், 78 பேர் 450க்கு மேலும், 49 பேர் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் செங்கோல், முதல்வர் புனிதவள்ளி, செயல் இயக்குனர் சாலை கனகதாரன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.