/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எஸ்.டி. ஈடன் பள்ளி மாணவர்கள் சாதனை
/
எஸ்.டி. ஈடன் பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : மே 13, 2024 05:26 AM

வடலுார்: வடலுார் எஸ்.டி.ஈடன் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.
மாணவிகள் அப்ரா 494 மதிப்பெண் பெற்று முதலிடம், ஷஹானா பானு 493 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர் யாகேஷ்வரன் 491 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர்.
பள்ளியில் 32 பேர் 480க்கு மேலும், 71 பேர் 450க்கு மேலும், 149 பேர் 400க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றனர்.
கணிதத்தில் 15 பேர், அறிவியலில் 3 பேர், சமூக அறிவியலில் 5 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர்.
சேத்தியாத்தோப்பு எஸ்.டி.ஈடன் பள்ளி மாணவர் வசந்தபரணி 487 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். 10 பேர் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் சுகிர்தா தாமஸ் மற்றும் நிர்வாக இயக்குனர் தீபக் தாமஸ் ஆகியோர் பாராட்டி, கவுரவித்தனர்.