ADDED : மே 25, 2024 01:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி ஜான்டூயி நர்சரி பள்ளியில் மாநில அளவிலான செஸ் சாம்பியன் போட்டி நடந்து வருகிறது.
பண்ருட்டி ஜான்டூயி நர்சரி பிரைமரி பள்ளியில் மாநில அளவில் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 22ம் தேதி துவங்கியது. பள்ளி தாளாளர் வீரதாஸ், ரோட்டரி சங்க செயலாளர் செந்தில்குமார், எஸ்.வி.ஜீவல்லர்ஸ் அருள், பள்ளிக் குழும இணை செயலாளர் நிதின்ஜோஷ்வா போட்டியை துவக்கி வைத்தனர். மாவட்ட சதுரங்க சங்க செயலாளர் பாண்டியன் வரவேற்றார்.
இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இருந்து 255 பேர் பங்கேற்றுள்ளனர். நாளை 26ம் தேதி வரை போட்டிகள் நடக்கிறது. பின், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.

