/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பஸ் மீது கல்வீச்சு; பெண் காயம்
/
அரசு பஸ் மீது கல்வீச்சு; பெண் காயம்
ADDED : மே 04, 2024 06:55 AM
புவனகிரி : புவனகிரி அருகே அரசு பஸ் மீது கல் வீச்சு சம்பவம் தொடர்வதால் பொதுமக்கள் பஸ்சில் பயணிக்க மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
சிதம்பரத்தில் இருந்து பூவாலைக்கு அரசு டவுன் பஸ் தடம் எண் 9, நேற்று முன் தினம் இரவு சென்றது. புவனகிரி அடுத்த தெற்குத்திட்டை அருகில் சென்ற போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் பஸ் மீது கல்வீச்சி தாக்கினர்.
இதில் பஸ்சில் பயணித்த பூவாலை அடுத்த அலமேலு மங்காபுரத்தை சேர்ந்த திவ்யா,21; முகத்தில் காயம் ஏற்பட்டது. உடன் அவரை புவனகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கடந்த இரு தினங்களுக்க முன்தினம் மர்ம நபர்கள்கள் அதே இடத்தில் கல்வீசி தாக்கியதில் அரசு பஸ் கண்ணாடி உடைந்தது.
இது குறித்து புகார் அளித்தும் புவனகிரி போலீசார் கண்டு கொள்ளாததால், நேற்று முன்தினமும் இதே சம்பவம் நடந்துள்ளது.
இச்சம்பம் சமூக வலைதளங்களில் பரவியதால், போலீசார் சந்தேகத்தின் பேரில் இருவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துவந்த விசாரித்து வருகின்றனர். பின் சிதம்பரம் ஏ.எஸ்.பி., ரகுபதியும், நேற்று புவனகிரி போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினார்.