ADDED : ஆக 31, 2024 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி கட்டப்படுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் நிறுத்தப்பட்டது.
விளையாட்டு மைதானத்தில் உள்ள மரங்களை அகற்றிவிட்டு, அங்கு விடுதி கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று மரங்களை வெட்டும் பணி துவங்கியது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், பணி நிறுத்தப்பட்டது. திட்டக்குடி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி முடிவெடுக்கப்படும் என தெரிவித்ததை ஏற்று கலைந்து சென்றனர்.