ADDED : ஆக 09, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
வேப்பூர்: உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி, வேப்பூர் சாய் அப்பல்லோ கல்வி நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
நல்லுார் வட்டார அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில், மருத்துவ அலுவலர் தமிழரசன் தலைமை தாங்கினார்.
சாய் அப்பல்லோ கல்வி நிறுவன நிர்வாக அலுவலர் சண்முக பிரியா வரவேற்றார். சுகாதார ஆய்வாளர்கள் கிஷோர், தேவக்கிருஷ்ணன், சாய் அப்பல்லோ கல்வி நிறுவன அலுவலர்கள் தீபா, நளினி, சரண்யா, கீர்த்தனா, கனிமொழி உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், தாய்ப்பாலின் முக்கியத்துவம், அதன் மூலம் குழந்தைகளுக்கு கிடைக்கும் நன்மைகள், தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதற்கான உணவுகள் குறித்து சாய் அப்பல்லோ கல்வி நிறுவன மாணவ, மாணவிகள் தாய்மார்களுக்கு எடுத்துரைத்தனர்.
