/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மயங்கி விழுந்த மாணவி தேர்வு அறையில் பரபரப்பு
/
மயங்கி விழுந்த மாணவி தேர்வு அறையில் பரபரப்பு
ADDED : மார் 07, 2025 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி அரசு பள்ளி யில் தேர்வு எழுதிய பிளஸ்2 மாணவி, மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு நேற்று நடந்தது. இங்கு, கிருஷ்ணாபுரம் அரசு பள்ளி மாணவி நதியா என்பவர் தேர்வு எழுதினார்.
தேர்வு முடிந்த நிலையில், பகல் 1:15 மணிக்கு தேர்வு அறையில் மயங்கி விழுந்தார். அந்த மாணவியை, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் தேர்வு அறையில் பரபரப்பு ஏற்பட்டது.