/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிள்ளையில் மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
/
கிள்ளையில் மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஏப் 06, 2024 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: கிள்ளையில், நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடக்க உள்ளதையொட்டி, நுாறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் நுாறு சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி, கிள்ளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலத்தை, செயல் அலுவலர் மருது பாண்டியன் துவக்கி வைத்தார்.
ஊர்வலம், முக்கிய தெருக்கள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வந்தடைந்தது.

