/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலீஸ் நிலையத்தில் மாணவர்கள் களப்பணி
/
போலீஸ் நிலையத்தில் மாணவர்கள் களப்பணி
UPDATED : மார் 22, 2024 12:06 PM
ADDED : மார் 22, 2024 12:06 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில், பள்ளி மாணவர் காவல் படையினர் களப்பணி மேற்கொண்டு, போலீஸ் பணிகளை கேட்டறிந்தனர்.
கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில், எஸ்.பி., ராஜாராம் ஆலோசனைப்படி, மாணவர்கள் காவல்படை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி பருவத்தில் போலீசாரின் பணிகள்,போதை பொருட்களின் தீமைகள், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு போன்றவற்றை மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில், நெல்லிக்குப்பம் அருகே திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணர்கள் காவல் படையினர், தலைமையாசிரியர் தேவனாதன் மேற்பார்வையில் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையம், தீயணைப்பு நிலையங்களுக்கு களப்பணி மேற்கொண்டு அவர்களின் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
உடற்பயிற்சி ஆசிரியர் ஆரோக்கிய சுந்தரராஜ், போலீசார் ராமதாஸ், அறிவழகன், விமலா ஆகியோர் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

