/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கார் மோதிய விபத்தில் மாணவர்கள் காயம்
/
கார் மோதிய விபத்தில் மாணவர்கள் காயம்
ADDED : ஆக 15, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் கார் மோதிய விபத்தில் ஆட்டோவில் ஏற முயன்ற இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர்.
கடலுார் கோண்டூர் பகுதியை சேர்ந்தவர் நவீன்ராஜ் மகன் அஸ்வின், 13; மற்றும் தாமோதரன் மகள் தாமரை, 14; இருவரும் நேற்று கடலுார் செம்மண்டலம் பஸ் நிறுத்தத்தில் ஒரு ஷேர் ஆட்டோவில் ஏற முயன்றனர். அப்போது, அங்கு பின்னால் வந்த கார் ஒன்று, ஆட்டோ மீது மோதியது.
இதில், ஆட்டோவில் ஏற முயன்ற அஸ்வின், தாமரை இருவரும் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தகவலறிந்த கடலுார் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.