/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குறுவட்ட போட்டிக்கு மாணவர்கள் தேர்வு
/
குறுவட்ட போட்டிக்கு மாணவர்கள் தேர்வு
ADDED : ஆக 01, 2024 06:45 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் கல்வி மாவட்ட பள்ளிகளில் பயிலும் 14 முதல் 17, 19 வயது பிரிவினருக்கான குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள், இருப்புக்குறிச்சி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் மாணவர்களை தேர்வு செய்யும் பணி, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
அதில், 100 மீட்டர், 200, 400, 800, 1500 மற்றும் 3,000 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகளுக்கு 6 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், குழு போட்டிகள், கையுந்து பந்து, கால்பந்து, எரிபந்து, செஸ், கேரம் போட்டிகளுக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
உடற்கல்வி இயக்குனர் மகாலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜராஜசோழன், பிரகாசம் உள்ளிட்டோர் தகுதியான மாணவர்களை தேர்வு செய்து, அவர்கள் போட்டியில் வெற்றி பெறும் அளவுக்கு தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.