/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அடிப்படை வசதிகளின்றி மாணவர்கள் தவிப்பு
/
அடிப்படை வசதிகளின்றி மாணவர்கள் தவிப்பு
ADDED : செப் 12, 2024 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அண்ணா விளையாட்டு மைதானத்தில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் துவங்கியது. இப்போட்டியில், பங்கேற்க பள்ளி, கல்லுாரி மாணவ, -மாணவியர், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பொதுப் பிரிவினர் என 22 ஆயிரத்து 82 பேர் பதிவு செய்துள்ளனர்.
போட்டியில் பங்கேற்க ஏராளமான மாணவ மாணவியர் குவிந்துள்ள நிலையில், அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை.
இதனால், வெளியூரில் வந்திருந்த மாணவ மாணவியர், பெற்றோர், ஆசிரியர்கள் தவித்தனர். எனவே, வசதிகள் ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.