/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேர்வு விதிமுறைகள் கடைபிடித்த மாணவர்கள்
/
தேர்வு விதிமுறைகள் கடைபிடித்த மாணவர்கள்
ADDED : ஏப் 29, 2024 04:03 AM

'நீட்' தேர்வு மையத்தில் மாணவ, மாணவிகள் மொபைல் போன் எடுத்து வரக்கூடாது. வாட்ச், வளையல், கம்மல், மூக்குத்தி, மோதிரம் உள்ளிட்ட ஆபரணங்கள், ேஹர் பின், ேஹர் கிளப் அணிந்து வர தடை உள்ளது. இது தொடர்பாக தினமலர் நாளிழில், செய்தி வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நேற்று தேர்வு எழுத வந்த மாணவ மாணவியர் பெரும்பாலும் தேர்வு விதிமுறைகளை முறையாக கடைபிடித்தனர்.
சில மாணவியர் மட்டும் ேஹர் பின், ேஹர் கிளப், கம்மல், மோதிரம், வளையல் ஆகியவற்றுடன் வந்து, கழற்றி, பெற்றோரிடம் பாதுகாப்பாக கொடுத்துவிட்டு தேர்வு மையத்திற்குள் சென்றனர். பெற்றோருடன் வராத ஒரு மாணவரின் மொபைல் போன் மற்றும் மாணவியர் இருவரின் கைப்பை பாதுகாப்பாக வைத்துவிட்டு தேர்வு எழுத சென்றனர்.

