/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இன்ஜினியரிங் படிக்க விரும்பும் மாணவர்கள் எந்தக் கல்லுாரி என்ன பாடப்பிரிவு என்பதை தேர்வு செய்ய வேண்டும்: கவுன்சிலிங் கமிட்டி செயலர் புருேஷாத்தமன்

ADDED : ஜூலை 01, 2024 06:41 AM

கடலுார் : இன்ஜினியரிங் படிக்க விரும்பும் மாணவர்கள், முதலில் எந்த கல்லுாரி, என்ன பாடப்பிரிவு என்பதை தேர்வு செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி செயலர் பேராசிரியர் புருேஷாத்தமன் கூறினார்.
தினமலர் நாளிதழ் சார்பில் கடலுார் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடந்த இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;
இன்ஜினியரிங் பாடத்திற்கு ஒளிவு மறைவின்றி கவுன்சிலிங் நடக்கிறது. கவுன்சிலிங் தொடர்பான விவரங்களை டி.என்.இ.ஏ., இணையதளத்தில் மட்டுமே பார்க்க வேண்டும். கவுன்சிலிங் தொடர்பாக வெப் சைட்டில் பதிவேற்றம் செய்யப்படுகின்றது.
விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோருக்கு சிறப்பு கலந்தாய்வு நடக்கும். 6 முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாணவர்களுக்கு தனியாக ஒரு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கான முழு தொகையையும் அரசே ஏற்கிறது. அரசு பள்ளி மாணவர்கள் 7.5 சதவீதம் ஒதுக்கீடு மற்றும் பொது கலந்தாய்விலும் கலந்து கொள்ளலாம்.
கவுன்சிலிங்கில் மாணவர்கள் கவனமாக கலந்துகொண்டால் மட்டுமே, தங்களுக்கு தேவையான கல்லுாரிகளை தேர்வு செய்ய முடியும். மாணவர்கள் முதலில் எந்த கல்லுாரி மற்றும் என்ன பாடப்பிரிவு என்பதை தேர்வு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
கல்லுாரிகளின் விவரங்களை நன்கு அறிய வேண்டும். நீங்கள் தேர்வு செய்யவுள்ள கல்லுாரியில், உங்கள் மதிப்பெண்ணிற்கு கடந்த 5 ஆண்டுகளில் என்ன பாடப்பிரிவு கிடைத்துள்ளது என்பதை ஆராய வேண்டும். கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளும் மாணவர்களின் வசதிக்காக சாய்ஸ் கொடுக்கப்படும்.
தங்களுக்கு தேவையான பாடப்பிரிவுகளை மூன்று ரவுண்ட்களில் பங்கேற்று முடிவு செய்து கொள்ளலாம். பாடப்பிரிவு தேர்வு செய்தபின், உங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லுாரிக்கு நேரில் சென்று கல்வி கட்டணம் செலுத்தி, சான்றிதழ் கொடுத்து சேர வேண்டும். இல்லையென்றால், உங்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட் காலியானதாக அறிவிக்கப்படும்.
தற்காலிகமாக தேர்வு செய்தவர்கள், தமிழக பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையத்திற்கு சென்று கல்வி கட்டணம் மற்றும் சான்றிதழ் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த சேவை மையத்தில் உள்ள அதிகாரிகள் இன்ஜினியரிங் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு, மாணவர்களுக்கு உதவுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.