ADDED : மே 21, 2024 05:26 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த மிராளூர் அரசு விதைப்பண்ணையில், 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, வேளாண் துணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
கடலுார் மாவட்டத்தில் உள்ள அரசு விதைப்பண்ணை விளைநிலங்களில், தமிழக முதல்வரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ் இயற்கை பூச்சி விரட்டிகளான நொச்சி, ஆடாதோடா செடிகளை வளர்த்து, விவசாயிகளிடம் 90 ஆயிரம் செடிகளை வழங்குவதற்கு வேளாண் துறை திட்டமிட்டுள்ளது.
அதனை நடைமுறை படத்துவதற்காக கடலுார் வேளாண் துணை இயக்குனர் பிரேம்சாந்தி தலைமையில் புவனகிரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் முகமதுநிஜாம், வேளாண் அலுவலர் உண்ணாமலை ஆகியோர் சேத்தியாத்தோப்பு அருகே மிராளூர் அரசு விதைப்பண்ணை மற்றும் வண்டுராயன்பட்டு அரசு விதைப்பண்ணை விளை நிலங்களை ஆய்வு செய்தனர்.
அங்கு நொச்சி, ஆடாதோடா மரக்கன்றுகளை பயிரிடுவதற்கான இடங்களை தேர்வு செய்தனர். அப்போது, மரக்கன்றுகள் நாற்றங்கல் அமைக்க ஏற்பாடுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

