/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாணவியர் விடுதிகளில் மருத்துவ குழுவினர் ஆய்வு
/
மாணவியர் விடுதிகளில் மருத்துவ குழுவினர் ஆய்வு
ADDED : செப் 10, 2024 06:35 AM

திட்டக்குடி : திட்டக்குடியில், அரசு மாணவியர் விடுதிகளில், மங்களூர் வட்டார மருத்துவக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
திட்டக்குடியில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அரசு மாணவியர் விடுதியில் 60 பேரும், அரசு ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் 90 பேரும் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மங்களூர் வட்டார மருத்துவக்குழுவினர், விடுதிகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து டாக்டர் ஆனந்தி, மருந்தாளுனர் சரவணன் உள்ளிட்ட குழுவினர் மாணவிகளை உடற்பரிசோதனை செய்து மருந்து, மாத்திரை வழங்கினர். அப்போது, சுகாதார நலக்கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.