/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொது பார்வையாளர் திட்டக்குடியில் ஆய்வு
/
பொது பார்வையாளர் திட்டக்குடியில் ஆய்வு
ADDED : ஏப் 02, 2024 11:04 PM

திட்டக்குடி :கடலுார் லோக்சபா தொகுதிக்குட்பட்ட, திட்டக்குடி தொகுதியில் தேர்தல் பொது பார்வையாளர் டாரப் இம்சென் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
லோக்சபா தேர்தலையொட்டி, இந்திய தேர்தல் ஆணையம் கடலுார் தொகுதி பொது பார்வையாளராக டாரப் இம்சென்னை நியமித்துள்ளது. நேற்று திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமை பார்வையிட்டார். முதல்கட்ட பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்கள் மற்றும் விடுபட்டவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வழங்கப்படுவதை பார்வையிட்டார்.
தொடர்ந்து ஈ.கீரனுார், ஆவட்டி, ம.புடையூர், ராமநத்தம், வாகையூர் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளை பார்வையிட்டார். உதவி தேர்தல்நடத்தும் அலுவலர் சங்கர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

