/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புறநகர் பஸ் நிலையம் 'கிடப்பில்' ஆட்சி மாறியும் காட்சி மாறல...
/
புறநகர் பஸ் நிலையம் 'கிடப்பில்' ஆட்சி மாறியும் காட்சி மாறல...
புறநகர் பஸ் நிலையம் 'கிடப்பில்' ஆட்சி மாறியும் காட்சி மாறல...
புறநகர் பஸ் நிலையம் 'கிடப்பில்' ஆட்சி மாறியும் காட்சி மாறல...
ADDED : செப் 11, 2024 01:24 AM
கடலுார் மாவட்டத்தில் இருந்து விருத்தாசலத்தை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தி.மு.க., குழந்தை தமிழரசன் எம்.எல்.ஏ., துவங்கி, பா.ம.க., கோவிந்தசாமி, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தே.மு.தி.க., முத்துக்குமார், அ.தி.மு.க., கலைச்செல்வன், சிட்டிங் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் வரை சட்டசபையில் போராடியும் கிடைத்தபாடில்லை.
இதனால் அப்போதைய தி.மு.க., அமைப்பு செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமாக இருந்த செல்வராசு தனது சொந்த இடத்தை கொடுத்து பஸ் நிலையமாக உருவாக்கினார். 30 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட பஸ் நிலையம், இன்று வரை இட நெருக்கடியில் இயங்கி வருகிறது. பயணிகள், டிரைவர், கண்டக்டர்கள் அடிப்படை வசதியின்றி தவிக்கின்றனர்.
அ.தி.மு.க., ஆட்சியில் முன்னாள் அமைச்சர் சம்பத், முன்னாள் நகர்மன்ற தலைவர் அருளழகன் ஆகியோர் புறவழிச்சாலையில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கும் பணியில் மும்முரமாக இறங்கினர். அதன்பின், அ.தி.மு.க., கலைச்செல்வன் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது முயற்சித்தும் பலனில்லை. ஆட்சி மாறியும் காட்சி மாறல... என்ற கதையாக இதுநாள் வரை புறநகர் பஸ் நிலையம் அமைப்பது குறித்து யாரும் கவனிக்கவில்லை.
இதனால் பிரதான ஜங்ஷன் சாலையில் இருந்து பஸ்கள் உள்ளே சென்று வெளியே வர முடியாமல் மிகுந்த நெருக்கடி ஏற்படுகிறது. எம்.எல்.ஏ.,க்கள் பலர் மாறியும், பஸ் நிலையம் மட்டும் இடம் மாறல என தொகுதி மக்கள் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

