/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர குடோன் பூட்டை திறக்க முடியாததால் திடீர் பரபரப்பு
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர குடோன் பூட்டை திறக்க முடியாததால் திடீர் பரபரப்பு
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர குடோன் பூட்டை திறக்க முடியாததால் திடீர் பரபரப்பு
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர குடோன் பூட்டை திறக்க முடியாததால் திடீர் பரபரப்பு
ADDED : மார் 23, 2024 05:58 AM

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர குடோன் பூட்டு திறக்க முடியாததால் கலெக்டர் அலுவலத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்., 19ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், கடலுார் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, தேர்தல் ஆணையத்தின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு குடோனில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று அந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பகுப்பாய்வு செய்து 9 சட்டசபை தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி துவங்கியது.
இதற்காக, பாதுகாப்பு அறை கலெக்டர் தலைமையில், அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று காலை 9:30 மணியளவில் திறப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக, கலெக்டர் அலுவலகத்திற்கு அனைத்து கட்சி பிரமுகர்கள் நேற்று காலை 9:30 மணியளவில் வந்திருந்தனர்.
பின், காலை 10:15 மணியளவில் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருந்த அறையை திறக்க பூட்டின் உள் சாவியை ஊழியர்கள் போட்டனர்.
அப்போது, திடீரென சாவி பூட்டின் உள்ளே சிக்கிக்கொண்டது. இதையடுத்து, நீண்ட நேரம் முயற்சி செய்தும், பூட்டு திறக்க முடியாமல் ஊழியர்கள் தவித்தனர். இதனால் கலெக்டர் மற்றும் அரசு அலுவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் நீண்ட நேரமாக அறையின் வெளியே காத்திருந்தனர்.
இதன்பின், கடலுார் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த சாவி போடும், நபரை போலீசார் வரவழைத்தனர். அந்த நபர் வந்து, பூட்டின் உள் இருந்த சாவியை கொரடாவால், நைசாக வெளியில் எடுத்தார். அப்போது, அறையின் பூட்டு சாவிக்கு பதிலாக, வேறு சாவியை ஊழியர்கள் உள்ளே போட்டது தெரியவந்தது.
இதையடுத்து, பகல் 12:15 மணியளவில் சாவி போடும் நபர், மாற்று சாவி மூலம் பூட்டை திறந்தார். இதனால், இரண்டு மணிநேரம் கலெக்டர் மற்றும் அரசு ஊழியர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அவதியடைந்தனர்.
இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

