ADDED : ஜூலை 12, 2024 06:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலை கிழக்கு கோட்டம் சார்பில் , சிறப்பு பட்ட கரும்பு நடவு மற்றும் கரும்பு மகசூல் மேம்பாட்டு கருத்தரங்கம் நடந்தது.
கோட்ட முதுநிலை மேலாளர் கொளஞ்சிவேலன் வரவேற்றார்.
ஆலை மூலம் வழங்கப்படும் மான்யம், ஆழ உழவு, உளிக்கலப்பை பயன்படுத்துவது, மண் அணைப்பதன் அவசியம், இயந்திரம் மூலம் அறுவடை செய்வதன் பயன், அகலக்கால் அமைத்து ஒரு பரு கரணை பயன்படுத்தி சொட்டுநீர் பாசன முறையில் பாசனம் செய்தால் அதிக மகசூல் பெற முடியும் உள்ளிட்டவை குறித்து, விவசாயிகளுக்கு, அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.
ஆலை துணை பொது மேலாளர்கள் மரிய பிரான்சிஸ் சேவியர், தேவராஜன், மதிவாணன், பாலாஜி மற்றும் விவசாயிகள் திருமலை, திலகர், ராமலிங்கம் அபுசாலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.