/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருச்சோபுரம் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி
/
திருச்சோபுரம் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி
ADDED : மார் 11, 2025 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம் : திருச்சோபுரம் சத்யாயதாஷி சமேத திருச்சோபுரநாதர் கோவிலில், மூலவர் மீது சூரிய ஒளிபடும் நிகழ்வு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கோவிலில் ஆண்டுதோறும், மார்ச் மாதம் மூலவர் மீது அஸ்தமன நேரத்தில் சூரிய ஒளிபடும் அதிசய நிகழ்வு நடப்பது வழக்கம். இந்த சூரிய அஸ்தமன பூஜையில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தால், பல்வேறு தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.
நேற்று முன்தினம் மாலை 5:30 மணியளவில் மூலவர் சுவாமி மீது சூரிய ஒளிபடும் நிகழ்வு நடந்தது. இதையொட்டி மூலவர் திருச்சோபுரநாதருக்கு சிறப்பு அபிேஷக, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.