/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மானிய விலையில் பசுந்தாள் உர விதை வழங்கல்
/
மானிய விலையில் பசுந்தாள் உர விதை வழங்கல்
ADDED : ஜூலை 04, 2024 12:33 AM

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் தமிழக அரசின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையில் பசுந்தாள் உர விதை வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன் தலைமை தாங்கினார். தி.மு.க., மாவட்ட விவசாய பிரிவு கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கீதா விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் வழங்கி பேசினார்.
இதில் ஸ்ரீமுஷ்ணம் வட்டாரத்தைச்சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவனுார் , நந்தீஸ்வர மங்கலம் ஆகிய துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் 15 மெட்ரிக் டன் பசுந்தாள் உர விதைகள் இருப்பு உள்ளது.
இப்பகுதி விவசாயிகள் மண்வளம் காத்து மகசூல் பெருக்க வருடத்திற்கு ஒரு முறை பசுந்தாள் உர விதைகள் விதைத்து பூக்கும் நேரத்தில் உழவு செய்தால் மண் வளமும், சாகுபடியும் பெருகும் என தெரிவித்தார்.
மேலும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும் விதைகளை விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு 20 கிலோ வீதம் வாங்கி பயன்பெற வேண்டும் என கூறினார்.
இதில் துணை வேளாண்மை அலுவலர் வில்வேந்தன், உதவி வேளாண்மை அலுவலர் முத்துசரவணன், வேல்முருகன், புவனேஸ்வரி, பாலசுந்தரமூர்த்தி, அட்மா பணியாளர்கள் பாக்கியராஜ்,பாலமுருகன், ராஜவேல், பயிர் அறுவடை பரிசோதனை பணியாளர்கள் கண்ணன், தீபக், கிருஷ்ணகாந்த் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.