/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிச்சாவரம் சுற்றுலா மைய மேம்பாடு பணிகள் ஆய்வு
/
பிச்சாவரம் சுற்றுலா மைய மேம்பாடு பணிகள் ஆய்வு
ADDED : செப் 08, 2024 06:05 AM
கடலுார்: பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் மேம்பாடு பணிகளை, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு சுற்றுலா பயணிகளின் தேவைகளை நிறைவு செய்யவும், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு மேம்பாடு பணிகள் நடந்து வருகிறது.
இப்பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று ஆய்வுசெய்தார்.
அப்போது, வனத்துறை மூலம் பங்களாத்திட்டு பகுதியில் அலையாத்தி காடுகள் பாதுகாப்பு மையம் அமைக்கும் இடம் தேர்வு குறித்தும் ஆய்வு செய்தார்.
கிள்ளை காப்புக்காடு பகுதியில் அலையாத்தி காடுகள் நடவு பணிகள் மற்றும் அலையாத்திக் காடுகள் நாற்றாங்காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், கிள்ளை மீனவ கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் நேர்கல் சுவர்கள் மண் அரிமான தடுப்புச்சுவர், மீன் ஏலக்கூடம், வலைப்பின்னும் கூடம், சுகாதார வளாகம் மற்றும் உட்புற சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் மற்றும் முகத்துவாரம் நிலைப்படுத்தும் பணி நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுக்குப்பம், 8 கோடி ரூபாய் மதிப்பிலும், சித்திரைப்பேட்டை மற்றும் நஞ்சலிங்கம்பேட்டை கிராமங்களில் 7.50 கோடி ரூபாய் மதிபிலும், சொத்திக்குப்பம் மற்றும் ராசாப்பேட்டை மீனவ கிராமங்களில் 8.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது டி.ஆர்.ஓ., ராஜசேகரன், சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மி ராணி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.