/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்ரீமுஷ்ணத்தில் திட்டப்பணிகள் ஆய்வு
/
ஸ்ரீமுஷ்ணத்தில் திட்டப்பணிகள் ஆய்வு
ADDED : ஆக 08, 2024 11:41 PM

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் நடந்து வரும் திட்டப்பணிகளை, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் நடந்துவரும் திட்டபணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று கோப்புகளை பார்வையிட்டார்.
அப்போது, கால்வாய் அமைக்கும் பணிக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் மற்றும் பூவராகசுவாமி கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து மனு அளித்தனர்.
பேரூராட்சி பகுதியில் நடந்து வரும் பணிகள் குறித்து கேட்டறிந்து கோப்புகளை ஆய்வு செய்தார். செயல் அலுவலர் யசோதா, பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன், ஆத்மா திட்டக்குழு தலைவர் தங்க ஆனந்தன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். பின்னர், மேலப்பாளையூர்-ஆதனூர் இடையே காட்டோடையின் குறுக்கே ரூ. 3 கோடி செலவில் கட்டப்பட்டுவரும் மேம்பால பணிகளை ஆய்வு செய்தார்.
ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் சேகர், பி.டி.ஓ.,க்கள் பாலகிருஷ்ணன், ராமமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.