/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணா கிராமத்தில் திட்டப்பணிகள் ஆய்வு
/
அண்ணா கிராமத்தில் திட்டப்பணிகள் ஆய்வு
ADDED : ஜூலை 26, 2024 04:29 AM

கடலுார்: நெல்லிக்குப்பம் அருகே அண்ணாகிராமம் ஒன்றிய பகுதிகளில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம், மேல்கவரப்பட்டு ஊராட்சியில் பஸ் நிறுத்தம், மேல்கவரப்பட்டு ஊராட்சியில் வளம் மீட்பு பூங்கா பணி ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, அவ்வூராட்சியில் அங்கன்வாடி குழந்தைகளுடன் கலந்துரையாடி அமைப்பாளரிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.
மாளிகைமேடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் புதிய துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணி, வளம் மீட்பு பூங்கா கட்டுமானம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.
ஆய்வின்போது பி.டி.ஓ.,க்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிகள் கலந்து கொண்டனர்.

