/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலி மார்க்கத்தில் ரயில் பாதை ஆய்வு
/
நெய்வேலி மார்க்கத்தில் ரயில் பாதை ஆய்வு
ADDED : மே 22, 2024 11:22 PM
விருத்தாசலம் : விருத்தாசலம் ரயில்வே பொறியாளர் குழு, நெய்வேலி மார்க்கத்தில் டிராலியில் சென்று, ரயில்வே பாதையை ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை - திருச்சி, கடலுார் - சேலம் மார்க்கத்தில், விருத்தாசலம் ரயில் நிலையம் முக்கிய சந்திப்பு. இவ்வழியாக தினசரி 50க்கும் மேற்பட்ட பயணிகள், சரக்கு ரயில்கள் செல்கின்றன.
அதிக ரயில் போக்குவரத்து மற்றும் கடும் வெப்பம் காரணமாக தண்டவாளங்கள் விலக வாய்ப்புள்ளது. இதனால் தண்டவாளங்களை பராமரிக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, விருத்தாசலத்தில் இருந்து நெய்வேலி ரயில் நிலையம் வரை ரயில் பாதையில் சோதனை நடந்தது.
இதற்காக, ரயில்வே பொறியாளர் குழு, டிராலியில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது ரயில் பாதையில் ஏதேனும் மாற்றம், சிக்னல்கள் இயக்கம், சிலீப்பர் கட்டைகள் சரிவர உள்ளனவா என சரிபார்த்தனர். மேலும், பாலம், கல்வெர்ட்டுகளில் ஆய்வு செய்து, சீரமைக்கும் பணிகள் குறித்து சரிபார்க்கப்பட்டது.

