/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தார் சாலை பணி தடுத்து நிறுத்தம்; பெண்ணாடம் அருகே பரபரப்பு
/
தார் சாலை பணி தடுத்து நிறுத்தம்; பெண்ணாடம் அருகே பரபரப்பு
தார் சாலை பணி தடுத்து நிறுத்தம்; பெண்ணாடம் அருகே பரபரப்பு
தார் சாலை பணி தடுத்து நிறுத்தம்; பெண்ணாடம் அருகே பரபரப்பு
ADDED : ஏப் 26, 2024 11:39 PM

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே தார் சாலை பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.
பெண்ணாடம் அடுத்த செம்பேரி காலனியில் உள்ள கிராம இணைப்பு சாலை முதலமைச்சரின் கிராம சாலை திட்டத்தில், 23 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நேற்று காலை துவங்கியது. இப்பணி குறித்து அறிவிப்பு பலகை எதுவுமின்றி பணிகள் நடந்ததால் எவ்வளவு மதிப்பு, எவ்வளவு துாரம், அளவு உள்ளிட்டவற்றில் மக்களுக்கு சந்தேகம் எழுந்தது.
தகவலறிந்த அப்பகுதி மக்கள் மாலை 3:30 மணியளவில், சாலைப் பணியை தடுத்து நிறுத்தி பணியில் ஈடுபட்டவர்களிடம் சாலையை அகலப்படுத்த வேண்டும். தரமாக போட வேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால், மாலை 4:00 மணியளவில் அவர்களாகவே கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.