ADDED : செப் 04, 2024 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகம் ஒன்றில், தலைமை பொறுப்பில் உள்ள அதிகாரிகள் முறையாக அலுவலகத்திற்கு வராதது, புரோக்கர்கள் ஆதிக்கத்திற்கு வழிவகுத்துள்ளது. அதிலும், தாசில்தாரின் டிரைவராக இருப்பவர் ஆட்டம் ஓவர். தான் வாகனம் ஓட்டும் அதிகாரியின் பெயரை பயன்படுத்தி, அலுவலர்களை ஆட்டுவிக்கிறார்.
பல ஆண்டுகளாக உடும்பு பிடியாக ஒரே இடத்தில் காலத்தை ஓட்டிவரும் அந்த டிரைவர், ஏரியாவுக்கு புதியவரான அதிகாரியை, தான் இழுத்த இழுப்புக்கு வரவைத்து கட்டுக்குள் வைத்துள்ளதாகவும், ஏற்கனவே ஒரு அதிகாரியை இப்படித்தான், பெரிய சிக்கலில் மாட்டிவிட்டுவிட்டார் என, அலுவலக ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.