/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலியில் தாசில்தார் அலுவலகம் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
/
நெய்வேலியில் தாசில்தார் அலுவலகம் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
நெய்வேலியில் தாசில்தார் அலுவலகம் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
நெய்வேலியில் தாசில்தார் அலுவலகம் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : ஜூன் 28, 2024 01:10 AM

நெய்வேலி: நெய்வேலி தொகுதியில் தாசில்தார் மற்றும் பி.டி.ஓ., அலுவலகம் அமைக்க வேண்டும் என, சட்டசபையில் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பேசினார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது அவர் பேசியது:
நெய்வேலி சட்டசபை தொகுதிக்கு தனியாக தாசில்தார் அலுவலகம் மற்றும் பி.டி.ஓ., அலுவலகம் தொடங்க வேண்டும், காமாட்சிபேட்டையில் கெடிலம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும், வடக்குத்து ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். என்.எல்.சி. நிறுவன விரிவாக்க பணிகளுக்கு வீடு மற்றும் தங்கள் வாழ்வாதாரமான விவசாய நிலங்களை வழங்கியவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப நிரந்தர பணியும், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்.
என்.எல்.சி.,யில் உபயோகப்படுத்தாமல் உள்ள சுமார் 1000 ஏக்கர் நிலத்தில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும், நெய்வேலியில் விமான நிலையம் விரைந்து செயல்படுத்த வேண்டும், இந்திரா நகர் பகுதியில் உழவர் சந்தை துவங்க வேண்டும். உங்கள் தொகுதி நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், முந்திரி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம், நெய்வேலி தொகுதி பலா விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் பலா மதிப்பு கூட்டுத்தொழிற்சாலை, கீழ்மாம்பட்டு நாளோடையில் தடுப்பணை கட்ட வேண்டும், நெய்வேலி தொகுதியில் விவசாய விளை பொருள்களை பாதுகாக்க குளிர்சாதன கிடங்குகளை அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.