/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண் வி.ஏ.ஓ.,விடம் தாலி செயின் பறிப்பு
/
பெண் வி.ஏ.ஓ.,விடம் தாலி செயின் பறிப்பு
ADDED : ஆக 15, 2024 05:14 AM
வடலுார்: குறிஞ்சிப்பாடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் வி.ஏ.ஒ.வின் கழுத்திலிருந்த தாலிச்செயினை பறித்துச்சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
குறிஞ்சிப்பாடி அடுத்த புலியூர்காட்டுசாகை மேற்கு தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் மனைவி சிவகங்கை,34. இவர் புவனகிரி அடுத்த ஆலம்பாடி கிராமத்தில் வி.ஏ.ஒ.வாக பணிபுரிகிறார். இவர் நேற்று முன் தினம் பணியை முடித்துவிட்டு தனது ஸ்கூட்டியில் தந்தை பாலுவுடன், புலியூர்காட்டுசாகை கிராமம் நோக்கி சென்றார்.
கடலூர் -விருத்தாசலம் சாலையில் பெத்தநாயக்கன்குப்பம் கிராமம் அருகே சென்றபோது பின்னால் மோட்டார் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர், சிவகங்கையின் கழுத்தில் இருந்த 3 சவரன் தாலிச்செயினை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார்.
இதுகுறித்து சிவகங்கை கொடுத்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.