/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தாம்பரம்- விழுப்புரம் ரயில்; கடலுார் வரை நீட்டிக்கப்படுமா
/
தாம்பரம்- விழுப்புரம் ரயில்; கடலுார் வரை நீட்டிக்கப்படுமா
தாம்பரம்- விழுப்புரம் ரயில்; கடலுார் வரை நீட்டிக்கப்படுமா
தாம்பரம்- விழுப்புரம் ரயில்; கடலுார் வரை நீட்டிக்கப்படுமா
ADDED : மே 02, 2024 11:20 PM
பண்ருட்டி: தாம்பரம்- விழுப்புரம் ரயிலை கடலுார் வரை நீட்டிக்க வேண்டும் என, ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
தெற்கு ரயில்வே நிர்வாகம், பொதுமக்களின் கோரிக்கை ஏற்று, கடந்த மாதத்தில் மட்டும் விழுப்புரம்- மயிலாடுதுறை ரயிலை திருவாரூர் வரையும். விருத்தாசலம்- திருச்சி ரயிலை விழுப்புரம்-திருச்சி வரையும். விருத்தாசலம்- சேலம் ரயிலை கடலுார்- சேலம் வரையும்.
மயிலாடுதுறை- பெங்களூர் ரயிலை, கடலுார்- பெங்களூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலுாரில் இருந்து சேலம், பெங்களூர் செல்பவர்களுக்கு வசதியாக உள்ளது.
அதுபோல் தாம்பரம்- விழுப்புரம் ரயிலை கடலுார் வரை நீட்டிக்க வேண்டும் என, பண்ருட்டி ரயில் பயணிகள் சங்கத்தினர் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அவர்கள் அனுப்பியுள்ள மனுவில், கடலுார் வரை தாம்பரம் ரயில் நீட்டிக்கப்பட்டால் கடலுார் மாவட்டத்தில் இருந்து சென்னை செல்பவர்களுக்கு தாம்பரம் ரயில் வசதியாக இருக்கும். விழுப்புரம்- தாம்பரம் ரயில் தினமும் விழுப்புரத்தில் அதிகாலை 5:20 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு 8:25 க்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் மாலை 6:00 மணிக்கு புறப்பட்டு இரவு 9:05 மணிக்கு விழுப்புரம் வந்தடைகிறது.
இந்த ரயில் கடலுார் வரை நீட்டிக்கப்பட்டால் கடலுார் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு செல்பவர்களுக்கும் வசதியாக இருக்கும். இந்த திட்டத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பும் இருக்கும். ஏனெனில் காலை புறப்பட்டு சென்னையில் காலை 9:00 மணிக்குள் சென்று இரவு வீடு திரும்ப முடியும் என்பதால் சென்னையில் பணிபுரிபவர்கள் அதிகளவில் சென்று திரும்பி வர முடியும். எனவே, இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என, கேட்டுக்கொண்டுள்ளனர்.