/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் கல்லுாரியில் தமிழ் புதல்வன் திட்டம் துவக்கம்
/
சிதம்பரம் கல்லுாரியில் தமிழ் புதல்வன் திட்டம் துவக்கம்
சிதம்பரம் கல்லுாரியில் தமிழ் புதல்வன் திட்டம் துவக்கம்
சிதம்பரம் கல்லுாரியில் தமிழ் புதல்வன் திட்டம் துவக்கம்
ADDED : ஆக 10, 2024 05:53 AM

கிள்ளை: சிதம்பரம் அரசு கலைக்கல்லுாரியில், தமிழ் புதல்வன் திட்டம் நேற்று துவக்கிவைக்கப்பட்டது.
தமிழகத்தில், கல்லுாரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், தமிழ் புதல்வன் திட்டத்தை நேற்று கோயம்புத்துாரில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். சிதம்பரம் அரசு கல்லுாரியில் நடந்த விழாவில் கல்லுாரி முதல்வர் அர்ச்சுனன் தலைமை தாங்கி, தமிழ் புதல்வன் திட்டத்தை துவக்கி வைத்து, மாணவர்களுக்கு ஏ.டி.எம்., கார்டை வழங்கினார்.
விழாவில், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். ஏற்பாடுகளை வரலாற்று துறை பேராசிரியர் பிரபாகரன் செய்திருந்தார்.இதில் அனைத்து துறை தலைவர்கள், பேராசியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், 694 மாணவர்களுக்கு டெபிட் கார்டு வழங்கப்பட்டது.