/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தார் சாலை பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
தார் சாலை பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஆக 03, 2024 04:22 AM

நெய்வேலி : நெய்வேலி தொகுதிக்குட்பட்ட குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியத்தில் ரூ. 1 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் முன்று இடங்களில் தார்சாலை அமைக்கும் பணியை சபா ராஜேந்திரன் எம்எல்ஏ நேற்று துவக்கி வைத்தார்.
மேல் வடக்குத்து காலனியில் இருந்து பொண்ணங்குப்பம் வரை ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை, ஆயிப்பேட்டை கே.எஸ்.கே., நகரில் இருந்து வேகாக்கொல்லை செல்லும் சாலை வரை ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை, மதனகோபாலபுரம் ஊராட்சியில் இருந்து ஆர்.சி காலனி வரை ரூ. 70 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., அந்தந்த பகுதிகளில் துவக்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர்கள் அஞ்சலை, ராஜ்குமார், துணைத் தலைவர் சடையப்பன், தி.மு.க., நிர்வாகிகள் குணசேகரன் , வீர ராமச்சந்திரன், வெங்கடேசன், ஏழுமலை, தண்டபாணி, ராஜ பூபதி, ராமர், வாஜீத், பிச்சையா, அந்தோணிதாஸ், அன்பழகன், துரை, காசிலிங்கம், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.