/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மாநகராட்சியில் வரி வசூல் சிறப்பு முகாம்
/
கடலுார் மாநகராட்சியில் வரி வசூல் சிறப்பு முகாம்
ADDED : ஜூலை 14, 2024 04:00 AM

கடலுார், : கடலுார் மாநகராட்சியில் இரு இடங்களில் நடந்த சொத்துவரி சிறப்பு முகாமில் , 85 விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலூர் மாநகராட்சியில் சொத்துவரி ரூ.18 கோடி அளவில் வசூல் ஆகாமல் நிலுவையில் உள்ளது. இதனை வசூலிக்கும் வகையில் மாநகராட்சி கமிஷனர் காந்திராஜன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
அந்த வகையில், மாநகராட்சி சார்பில் கடலுார் நகரில் திருப்பாதிரிப்புலியூர் சிங்காரவேலன் நகர் மற்றும் செம்மண்டலம் ஆகிய இரு இடங்களில் சொத்துவரி சிறப்பு முகாம் நடந்தது. மேயர் சுந்தரி ராஜா முகாமை துவக்கி வைத்தார்.
இரு முகாம்களிலும் பொதுமக்களிடம் இருந்து 85 சொத்துவரிக்கான விண்ணப்பங்கள் பெறப்பெற்று, இந்த மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு, கமிஷனர் காந்திராஜன் உத்தரவிட்டுள்ளார். முகாமில் மாநகராட்சி கவுன்சிலர்கள், மாநகராட்சி வருவாய் ஆய்வாளர்கள், வருவாய் உதவி ஆய்வாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.