
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி தலைக்குளம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு கலை விழா நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, தலைமை ஆசிரியர் துரைமணி ராஜன் தலைமை தாங்கினார். உதவி ஆசிரியை வசந்தா வரவேற்றார். பள்ளி மோலாண்மைக்குழு தலைவர் அதிர்ஷ்டவதி, ஊராட்சி உறுப்பினர் கிருஷ்ணவேணி, தன்னார்வலர் பாரதி ஆகியோர் மாணவர்களுடன் இணைந்து தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியை ஆகியோருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தனர்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் குமாரவேல், அன்பரசன், அருள் மற்றும் பலர் பங்கேற்றனர்.