/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தந்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
/
தந்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
ADDED : ஆக 24, 2024 09:22 PM
வேப்பூர்:வேப்பூரில், குடித்துவிட்டு வந்ததை தந்தை கண்டித்ததால், வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேப்பூர் அடுத்த கோ.கொத்தனுாரைச் சேர்ந்தவர் சின்னதுரை, 34. இவரது மனைவி ரேவதி, 27; திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. 7 வயதில் மகன் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் இருந்து வந்த சின்னதுரை, வேப்பூர் காந்தி நகரில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் சின்னதுரை குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 15 நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில், கணவரிடம் கோபித்துக்கொண்டு, ரேவதி தனது மகனுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில், கடந்த 22ம் தேதி இரவு 8:00 மணியளவில் சின்னதுரை, குடித்துவிட்டு வந்ததை அவரது தந்தை கண்டித்தாகதாக கூறப்படுகிறது. அதையடுத்து, வீட்டை உள்புறமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு, சின்னதுரை தற்கொலை செய்து கொண்டார்.
இரண்டு நாட்களாக வீடு திறக்கப்படாததால் உடல் அழுகி துர்நாற்றம் வீசியது. அருகில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து பார்த்தபோது, சின்னதுரை தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

