/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீர்த்தாம்பாளையத்தில் கோவில் கும்பாபிஷேகம்
/
தீர்த்தாம்பாளையத்தில் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 23, 2024 06:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை, : பரங்கிப்பேட்டை அடுத்த தீர்த்தாம்பாளையம் குட்டியாண்டவர் கோவில் தெருவில் உள்ள செல்வ விநாயகர் மற்றும் சப்த கன்னிகள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
அதையொட்டி, 21ம் தேதி முதல் கால யாக பூஜை நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று இரண்டாம் கால யாக பூஜையும், காலை 9:45 மணிக்கு, கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

