ADDED : மே 16, 2024 02:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார்: டிப்பர் லாரி மோதி, பைக்கில் சென்றவர் உயிரிழந்தார்.
குறிஞ்சிப்பாடி அடுத்த திருவெண்ணைநல்லுாரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்,55; இவரது உறவினர் புவனகிரி அடுத்த கீழ கொளக்குடி கிராமத்தை சேர்ந்த கணேசன்,50; இருவரும் நேற்று மாலை வடலுார் நான்கு முனை சந்திப்பு அருகே பைக்கில் சென்றனர்.
அப்போது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியது. அதில் படுகாயமடைந்த பாலகிருஷ்ணன், கணேசன் இருவரும் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு பாலகிருஷ்ணன் இறந்தார். கணேசன் மேல் சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வடலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.