/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இட ஒதுக்கீடு கோரி மகிளா காங்., ஊர்வலம் போலீசார் தடுத்ததால் விருதையில் பரபரப்பு
/
இட ஒதுக்கீடு கோரி மகிளா காங்., ஊர்வலம் போலீசார் தடுத்ததால் விருதையில் பரபரப்பு
இட ஒதுக்கீடு கோரி மகிளா காங்., ஊர்வலம் போலீசார் தடுத்ததால் விருதையில் பரபரப்பு
இட ஒதுக்கீடு கோரி மகிளா காங்., ஊர்வலம் போலீசார் தடுத்ததால் விருதையில் பரபரப்பு
ADDED : ஆக 31, 2024 02:53 AM

விருத்தாசலம்: 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை வலியுறுத்தி, விருத்தாசலத்தில் மகிளா காங்., நடத்தி ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.
மத்திய அரசு பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுத்து நிறுத்த வேண்டும். 33 சதவீத பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மகிளா காங்., சார்பில் விருத்தாசலம் அய்யனார் கோவில் தெருவில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, காமராஜர் சிலை வரை ஊர்வலமாக செல்வதாக திட்டமிடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மகிளா காங்., மாநில தலைவி சையத் அசீனா முன்னிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் புறப்பட்டது. டி.எஸ்.பி., கிரியா சக்தி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பொது மக்களை பாதிக்கும் வகையில் ஊர்வலம் செல்லக் கூடாது. இதுபோல் வேறு கட்சிகளும் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்பார்கள் என்பதால், தலைவர்கள் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு செல்லுங்கள் என போலீசார் தெரிவித்தனர்.
இதனால் காங்., நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மாநிலம் முழுதும் ஊர்வலம் செல்லும்போது விருத்தாசலத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுவது ஏன் என மாநில தலைவி சையத் அசீனா கேள்வி எழுப்பினார். பின், போலீசார் அறிவுறுத்தலை ஏற்று, அவர், காரில் புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் விருத்தாசலத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.