/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணிடம் செயின் பறிக்க முயன்றவர் கைது
/
பெண்ணிடம் செயின் பறிக்க முயன்றவர் கைது
ADDED : ஆக 22, 2024 12:35 AM

புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அருகே இளம்பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற, வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.
சிதம்பரம் அடுத்த பொன்னந்திட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலகுரு மகன் சந்தோஷ், 33; தனியார் கம்பெனிஊழியர்.
இவர் தனது மனைவி சுதா, இரண்டு குழந்தைகளுடன், கடந்த 17 ம் தேதி இரவு 11.00 மணியளவில் புதுச்சேரியில் இருந்து, பொன்னந்திட்டுக்கு பைக்கில் சென்றார்.
புதுச்சத்திரம் அடுத்த ஆலப்பாக்கம் ரயில்வே மேம்பாலம் அருகே வந்த போது, பைக்கில் பின்னால் வந்த வாலிபர் சுதா கழுத்தில் அணிந்திருந்தசெயினை பறிக்க முயன்றார். உடன் சுதாரித்துகொண்ட சுதா அந்த வாலிபரின் சட்டையை பிடித்து இழுத்ததால்,இரண்டு பைக்குகளும் கீழே விழுந்தது.
இதில் சந்தோஷ், சுதா மற்றும் அடையாளம் தெரியாத வாலிபர் காயமடைந்தனர். சுதா கூச்சலிடவே, அந்த வாலிபர் பைக்கை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றுவிட்டார். காயமடைந்தசந்தோஷ், சுதா இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். அப்போது, குள்ளஞ்சாவடி பகுதியில் காயமடைந்த வாலிபர் ஒருவர் சிகிச்சைக்காக அங்கு வந்துள்ளார்.
அந்த வாலிபரின் போட்டோவை போலீசார் சுதாவிடம் காட்டியபோது, அந்த வாலிபர்தான் செயின்பறிக்க முயன்றது தெரிந்தது.
இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து வடலூரைச் சேர்ந்த ஜெயபால் மகன் அஜித்குமார், 25;என்பவரை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.