/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் தேவை நகராட்சி கவுன்சிலர் கோரிக்கை
/
ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் தேவை நகராட்சி கவுன்சிலர் கோரிக்கை
ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் தேவை நகராட்சி கவுன்சிலர் கோரிக்கை
ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் தேவை நகராட்சி கவுன்சிலர் கோரிக்கை
ADDED : ஆக 31, 2024 03:08 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டில் நடந்து முடிந்துள்ள வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் தனது வார்டில் உள்ள நீண்டநாள் கோரிக்கைகள் குறித்து கவுன்சிலர் பக்கிரிசாமி கூறியதாவது;
ரூ.5 லட்சம் மதிப்பில் சாத்துக்கூடல் சாலையில், கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மேட்டுக்காலனி மயான சாலை ரூ.10 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கம்பர் தெருவில் ரூ.2 லட்சம் மதிப்பில் கல்வெர்ட் பாலம் கட்டப்பட்டுள்ளது. திரவுபதியம்மன் கோவில் பகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பில் ைஹமாஸ் விளக்கு என ரூ.25 லட்சத்திற்கு மேல் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து முடிந்துள்ளது.
அதேபோல், நகராட்சியில் உள்ள அனைத்து கழிவுநீரும் ஆலிச்சிக்குடி சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் வழியாக விளைநிலங்களில் கலந்து, விளைநிலக்கள் பாதிக்கிறது. எனவே, குழாய் அமைத்து கழிநீரை வெளியேற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், கம்பர் தெரு, மேட்டுக்காலனி பகுதிகளில் கழிவுநீர், சிமென்ட் சாலை அமைக்க வேண்டும். மேட்டுக்காலனி பகுதியில் வாடகை கட்டடத்தில் இயக்கும் ரேஷன் கடைக்கு, சொந்த கட்டடம் கட்டித் தர வேண்டும்.
எம்.கே.எம்.எஸ் நகர், விருத்தாம்பிகை நகர் பகுதிகளில் குடிநீர், தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பாலசுப்ரமணியன் நகரில் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும். திரவுபதியம்மன் கோவில் அருகே பொது கழிவறை கட்ட வேண்டும்.
மயான சாலைக்கு தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும். 5 கேரி தர்க்கா, பைராகி மடம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் என பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நகராட்சி நிர்வாகம் நிறைவேற்றி தர வேண்டும் என்றார்.