/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதியதாக போடப்பட்ட போர்வெல் வீணாகும் அவலம்
/
புதியதாக போடப்பட்ட போர்வெல் வீணாகும் அவலம்
ADDED : பிப் 22, 2025 07:22 AM

நடுவீரப்பட்டு; பத்திரக்கோட்டையில் புதியதாக போடப்பட்ட போர்வெல் அதிகாரிகளின் அலட்சியத்தால் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது.
பண்ருட்டி ஒன்றியம் சிலம்பிநாதன்பேட்டை ஊராட்சியை சேர்ந்த கிராமம் பத்திரக்கோட்டை.இந்த கிராமத்தில் குறிஞ்சிப்பாடி-நடுவீரப்பட்டு சாலையில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் பயன்பாட்டிற்கு கனிமவள நிதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் புதிய போர்வெல் போடப்பட்டது.
இந்த போர்வெல்லில் மோட்டார் இறக்காமல் உள்ளது. இது குறித்து கடந்த ஆண்டு நடந்த ஜமாபந்தியில் பொதுமக்கள் சார்பில் மனுகொடுக்கப்பட்டும் எவ்வித பலனும் இல்லை. இந்த இடம் தனிநபர் ஒருவர் உரிமை கொண்டாடியதால், பண்ருட்டி தாசில்தாருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. பண்ருட்டி தாசில்தார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் போர்வெல் போடப்பட்ட இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் அதிகாரிகள் அலட்சியத்தால் இந்த போர்வெல் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க தினமும் அவதியடைந்து வருகின்றனர்.

