நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த சின்னகொசப்பள்ளத்தை சேர்ந்தவர் சின்னதுரை, 63. சமையல் வேலை செய்து வந்தார். கடந்த 11ம்தேதி அதே பகுதியில் உள்ள தனது வயலுக்கு பைக்கில் சென்றார். அப்போது, சாலையோர பாசன வாய்க்கால் பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று இறந்தார்.
பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.