/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுகாதார நிலையம் திறப்பு விழா எப்போது மஞ்சக்கொல்லை மக்கள் எதிர்பார்ப்பு

ADDED : மே 20, 2024 05:33 AM

புவனகிரி : புவனகிரி ஒன்றியம், மஞ்சக்கொல்லையில் 1.20 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திறக்கப்படாமல் காட்சி பொருளாக உள்ளது.
புவனகிரி தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு, இங்கு இயங்கி வந்த ஆரம்ப சுகாதார நிலையம், கிருஷ்ணாபுரத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் புவனகிரி சுற்றுபகுதியை சேர்ந்த 36 கிராமங்களைச் சேர்ந்தவர்கள், கிருஷ்ணாபுரத்திற்கு சென்று வரமுடியாமல் பாதிக்கப்பட்டனர்.
பொதுமக்கள கோரிக்கையையேற்று, மஞ்சக்கொல்லையில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1.20 கோடி ரூபாய் செலவில் மஞ்சக்கொல்லையில் அனைத்து வசதிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் கிருஷ்ணாபுரம் ஆரம்ப சுகாதாரத்துறையினர் அலட்சியத்தால் மின்சாதனம் அமைக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது.
அதன் பின் தேர்தல் நடத்தை அமலக்கு வந்ததால், அனைத்து பணிகளும் முடங்கியுள்ளது. எனவே எஞ்சியுள்ள பணிகளை துரிதமாக முடித்து, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் சுகாதார நிலையத்தை விரைந்து திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.