/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வருக்காக போட்ட சாலையை திருடிய நபர்கள்
/
முதல்வருக்காக போட்ட சாலையை திருடிய நபர்கள்
ADDED : மார் 09, 2025 02:50 AM

கடலுார்: முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் 21ம் தேதி கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த விழாவில் பங்கேற்று, புதிய திட்டங்களை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
முதல்வரின் வருகையையொட்டி, பீச் ரோட்டில் இருந்து பாபு கலையரங்கம் வழியாக விழா மேடை வரை 'எம்.சாண்ட்' கலவை, ஜல்லி கொட்டப்பட்டு சாலை அமைக்கப்பட்டது. இச்சாலை வழியாக பொதுமக்கள், கட்சியினர் விழா அரங்கிற்கு வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு மேல், பொக்லைன் இயந்திரத்தால், பாபு கலையரங்கம் அருகில் சாலையை சுரண்டிய நபர்கள் டிராக்டரில் அள்ளிச் சென்றனர். பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சாலையையே திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.